மட்டக்களப்பில் மாவடிவேம்பில் அணிதிரண்ட பொதுமக்கள்.சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேதினக்கூட்டம்.

மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில்  திங்கட்கிழமை( 07.5.2018)  பிற்பகல் 3.00 மணியளவில் மே தினக்கூட்டம் இடம்பெற்றது.மேதினக் கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகைதந்தார்கள்.மும்மத அனுட்டானங்கள்,ஆசீர்வாதம் பேச்சுக்கள்,இடம்பெற்றது.

‘தேசிய ஒற்றுமைக்காக  தொழிலாளர் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகைதந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் நடைபெற்றது.

ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் சலுகைகள் பலவற்றை வென்றெடுத்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும்.

நாடுபூராகவும் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களான நிமால் சிறிபாலசில்வா,எஸ்.பீ.திசாநாயக்க,மஹிந்த அமரவீர,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,ஸ்ரீயாணி விஜயவிக்கிரமிங்க,பைசர் முஸ்தபா,தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா,வடமாகாண ஆளுநர் ரெயினே குரே, பிரதியமைச்சர்கள்,முன்னாள் பிரதாமர் டீ.எம்.ஜயரெட்ண,முன்னாள் அமைச்சர்கள் ஆளுநர்கள்,முதலமைச்சர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள்,பிரதேச அமைப்பாளர்கள்,மதத்தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts