மட்டக்களப்பு இளைஞர் சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு கொலை !

மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இருந்து சவுதிஅரேபிய நாட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக குடும்பத்தாருடன் எந்தவித தொடர்வும் இல்லத நிலையில் அவர்குறித்து வேலைக்குச் சென்ற வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் உடலை காட்டமுடியாது என கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராமத்தில் இருந்து சவுதிஅரேபிய நாட்டிற்கு வீட்டுச் சாரதியாகச் சென்ற யோகராசா ரமேஸ் என்ற இளைஞர் வீட்டுச சாரதியாக இரண்டாவது தடவையாக ஒரே விட்டில் பணிபுரிந்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்(14.11.2018) தங்களது பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய குறித்த இளைஞர் தனக்கு இங்கு பிரச்சினை உள்ளதாகவும் தனது போன் வேலைசெய்யாவிட்டால் தனது வீட்டு உரிமையாளரின் போனுக்கு அழைப்பை எடுக்குமாரு கூறியதுடன் தனது அம்மாவையும் அப்பாவையும் ஒன்றாக வந்து நிற்குமாறு கூறி அவர்களது காலை தொட்டு வீடியோ ஊடகாக வணங்கியதாகவும் அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தொடர்வும் வரவில்லை என அவரது தாயார் தெரிவித்தார்

அவருக்கு மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது அவரது தொலைபேசி வேலை செய்யாத நிலையில் சந்தேகம் அடைந்த அவரது தாயார் உறவினர்கள் ஊடாக வீட்டு உரிமையாளரிடம் தொலைபேசி ஊடாக கேட்டபோது உங்களது மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் உடலை காட்டமுடியாது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளோம் பொருட்களை எம்பசியில் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக சொல்வதை ஒருபோதும் ஏற்கமுடியாது அவனுக்கு தற்கொலை செய்துகொள்ளவேண்டிய தேவை இருக்கவில்லை அவனுக்கு அங்கு பணிபுரியும் வீட்டில் பிரச்சினை உள்ளதாகவும் ஒரு வாரமாக தனது வீட்டு உரிமையாளர் தனக்கு எந்த வேலையும் தரவில்லை அதனால் தான் நாட்டுக்கு வரப்போவதாகவே தங்களிடம் தெரிவித்ததாக இளைஞரின் தாயார் பல   தகவல்களை வெளியிட்டார்..

தனது மகன் இறந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவன் உயிருடன்தான் இருப்பதாகவும் அவனுக்கு அங்கு ஏதோ நடந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் சவுதிஅரேபியாவில் பணிபுரியும் இளைஞரின் உறவினர் ஒருவர் குறித்த இளைஞர் பணிவுரிந்த வீட்டிற்கு சென்று சம்பவங்களை நேரடியாக ஆராய்ந்தபோது ரமேஸ் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கூறியதுடன் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் குறித்த சடலத்தினை பார்வையிட சென்ற போது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் சடலத்தினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் அதனால் உயிரிழந்தது ரமேஸ் தானா என்று நம்பமுடியவில்லை எனவும் ரமேஸ் வேலை செய்த இடம் மற்றும் அவர் தங்கியிருந்த அறை பூட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் கடந்த ஒரு மாதகாலமாக இலங்கை தூதுவராலயம் ஊடாகவோ அல்லது சவுதியில் இருந்தோ உத்தியவூர்வமாக எழுத்து மூலம் எந்த அறிவிப்புக்களும் வரவில்லை என்பதோடு இது குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஏறாவூர் பொலீஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யச் சென்ற போது ஏறாவூர் பொலீசார் முறைப்பாடு எடுக்கமுடியாது என தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற தெரியாது கடந்த ஒரு மாதகாலமாக தவிக்கும் ரமேசின் குடும்பத்திற்கு தனது மகன் உண்மையில் இறந்துவிட்டானா அல்லது உயிருடன் உள்ளானா அவன் தற்கொலை செய்தது உண்மையா? அவனை யாரும் கொலை செய்து விட்டார்களா? என்று எதுவும் தெரியாத நிலையில் தனது மகன் என்ற குழப்பத்தில் உள்ளனர் தனது மகனுக்கான மரண சடங்கை கூட நடத்த முடியாத நிர்க்கதியான நிலையில் அவர்கள் உள்ளதால் அவர்கள் இறுதியாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மறுபுறம் வீட்டுச் சாரதியாக சென்ற ரமேசுடன் அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் பிரச்சினையில் ஈடுபட்டிருந்ததனால் அவரை வீட்டு உரிமையாளர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் ரமேசின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டால் அவரது மரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் தங்களது மகனின் கொலையை மறைக்கவே தங்களுக்கு இதுவரை எந்ததகவல்களையும் எம்பசி வழங்கவில்லை என ரமேசின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 222 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 52 பெண்கள் உள்ளடங்குவதாகவும், 145 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

மேலும் வீதி விபத்துக்களில் 21 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 25 ஆண்களும், ஆறு பெண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி, கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கை பணியாளர்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஏழு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts