மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வடிகாண்கள் தூர்நாற்றம் செய்கின்றது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை மையப்படுத்தியுள்ள வடிகாண்களுக்குள் கழிவுப்பொருட்கள் தேங்கியிருப்பதால் தூர்நாற்றம் வீசுகின்றது என நோயாளிகள்,வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகின்ற பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபையின் நேரடியான கண்காணிப்பில் பரிபாலனம் செய்யப்படுகின்ற மட்டக்களப்பு மாநகரசபை வடிகாண்களுக்குள் கழிவுப்பொருட்கள் தேங்கியுள்ளது.போதனா வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகின்றவர்கள்,வாகனங்களில் செல்கின்றவர்கள் உணவுப்பொருட்கள்,குடிபானங்களை வாங்கி உண்பவர்கள் உண்ட பின்பு வடிகாண்களுக்குள் வீசிவிட்டுச் செல்கின்றார்கள்.

இதனால் நீண்ட நாட்களுக்குள் உணவுப்பொருட்கள் பழுதடைந்து தூர்நாற்றம் வீசுகின்றது.மேலும் வைத்தியசாலையை அண்மித்த உணவங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களினாலும் தூர்நாற்றமாகவும் வீசுகின்றது.
இதனை சகித்துக் கொள்ளமுடியாத நிலைக்குள் பொதுமக்கள் நீண்டநாட்களாக அசௌரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.

இவ்விடயமாக மட்டக்களப்பு மாநகரசபையின் சுற்றாடல் பொறுப்பாளர்கள், மாநகரசபை சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு நகரில் உள்ள பொது இடங்களில் திண்மத்தொட்டிகளை வைத்தும்,அதற்குள்ளே தரம்பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்குரிய முன்னாயர்த்த வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி விழிப்பூட்ட வேண்டும்.நோயாளிகள் மற்றும் நகருக்குள் நுழையும் பொதுமக்கள் திண்மத்தொட்டிக்குள் கழிவுகளை இடவேண்டும்.அவ்வாறு இடுகையிடாமல் வீசுபவர்களுக்கு எதிராகவும்,வடிகாண்களுக்குள் கழிவுநீரை விடுபவர்களுக்கு எதிராகவும் காத்திரமான சட்ட நடவடிக்கையை மாநகரசபை முதல்வர், ஆணையாளர்,மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டும் என தூர்நாற்றத்தை சகித்துக்கொள்ளாத பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

Related posts