மட்டக்களப்பு மாநகரசபையின் 10வது அமர்வு…

மட்டக்களப்பு மாநகரசபையின் 10வது அமர்வும், 08வது பொதுக் கூட்டமும் இன்றைய தினம் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர், மாநகர ஆணையாளர் நா.மணிவண்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது முதல்வரின் அறிவித்தல்கள், முன்மொழிவுகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், காணிக்குழுவின் சிபாரிசுகள், உறுப்பினர்களின் பிரேரணைகள், மாதாந்த வரவு செலவுக் கூற்று, உறுப்பினர்களின் தனிநபர் உரைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

இன்றைய அமர்வு பல கருத்தாடல்கள் மற்றும் சர்ச்சைகளுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts