மட்டக்களப்பு மாநகரசபையின் 21வது பொதுச் சபை அமர்வு

மட்டக்களப்பு மாநகரசபையின் 21வது பொதுச் சபை அமர்வு இன்றைய தினம் (07) மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
 
இவ்வமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
மாநகரசபை சம்பிரதாய முறையில் ஆரம்பிக்கப்பட்ட அமர்வில் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள், மாதாந்த கணக்குக்கூற்று தொடர்பிலான ஆராய்வுகள், மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
????????????????????????????????????

Related posts