மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 78மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைப்பு.

(க. விஜயரெத்தினம்)
 

தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் புலமைப் பரீட்சையில் இமாலயச்சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் …இம்முறை வெளியாகியுள்ள புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தோற்றியுள்ள மாணவர்களில் 78மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும்,கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 43பேர் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பல்வேறு பௌதீக வளப்பற்றாக்குறையுடன் புலமைப்பரிசில் சித்தியடைந்துயடைந்தமை மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும்,பெற்றோர்களினதும் ஊக்குவிப்பாகும்.இருந்தும் இக்கல்வி வலயத்தில் 159 ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையும்,போதியளவு வறுமையும்,தளபாடக் பற்றாக்குறை,தூர இடங்களில் இருந்து வலயத்திற்கு பல்வேறு அசௌரியங்களுக்கு மத்தியில் கடமையாற்றல்,பாடசாலைகளுக்கிடையிலான தூரம் போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை மெச்சத்தக்கதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts