மட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் இன்று(17.2.2018) ஓய்வு பெறுகின்றார்

மட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் இன்று(17.2.2018) ஓய்வு பெறுகின்றார்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய கந்தசாமி-அருட்பிரகாசம் அவர்கள் 41வருட அரசசேவையிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை(17)ஓய்வு பெறுகின்றார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாக கொண்ட கோட்டக்கல்வி பணிப்பாளர் தனது முதல் ஆசிரியர் நியமனத்தை 1978.2.17 திகதி வவுனியா பெரிய கோமரசன்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தில் கற்பித்தலை மேற்கொண்டார்.அதன்பின்னர் நுவரேலியா கந்தப்பளை மெதடிஸ்த மத்திய கல்லூரி,அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம்,குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயம்,மட்டக்களப்பு இந்துக்கல்லூரி போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும்,அதிபராகவும்,கடமையை ஆற்றி 2017.10.25 முதல் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டு இன்றுவரையும் கடமையை ஆற்றி இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.

இவர் குருக்கள்மடம் மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலை,செட்டிபாளையம் மகா வித்தியாலயம் போன்றவற்றின் பழைய மாணவர் ஆவார்.தனது பட்டச்சான்றிதழையும்,பட்டப்பின் டிப்ளோமா,பாடசாலை முகாமைத்துவம் போன்றவற்றை  பேராதனை பல்கலைக்கழகம், நாவல திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றில் மேற்கொண்டார்.

இவரது கல்விச்சேவையின் பயனால் பலர் உயர் பதவிகளிலும்,சமூகத்தின் நல்ல பிரஜைகளாகவும் திகழ்கின்றார்கள்.இந்துக்கல்லூரியில் இவருடைய காலத்தில்  தொழிநுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை,உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்து காபட்வீதி இடப்பட்டமை,வாயிற்கோபுரம் அமைத்து புனரமைப்பு செய்தமை,ஆரம்பப்பிரிவு ஆரம்பித்தமை,உயர்தரத்தில் பெண் மாணவிகளை இணைத்தமை உள்ளிட்ட பல சமூக,சமயரீதியான பணிகளை செய்து வாழும் காலத்திலும்,சேவைசெய்த இடங்களிலும் சிறப்பான நிருவாக முகாமைத்துவம் செய்து பகையுமின்றி  வாழ்ந்தவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.

Related posts