மழையுடன் கூடிய காலநிலையால் நெல் அறுவடை கிழக்கு மாகாணத்தில் பரவலாக பாதிப்பு


கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையால் நெல் அறுவடை கிழக்கு மாகாணத்தில் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளதுகடந்த இரு வாரமாக மணிக்கொருமுறை பெய்துவரும் மழை காரணமாக அறுவடையை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாதிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்
ஏற்கனவே அறக்கொட்டி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் தற்பொழுது காற்றுடன் கூடிய மழைகாரணமாக நிலத்தில் விழுந்து முளைக்கின்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைக்க முடியாத நிலையும் தற்பொழுது ஏற்பட்டுள்ளதால் நெல்மணிகளின் தரம்கெட்டு விடுவதால் குறைந்த விலைக்கே விற்பனை செய்யவேண்டியிருப்பதாக மனவேதனை அடைகின்றனர் களைநாசினிகள் மற்றும்பூச்சி நாசினிகளின் விலையேற்றத்தின் மத்தியில் விவசாயத்தை மேற்கொண்ட மக்களுக்கு குறித்த காலத்தினுள் அறுவடை செய்யமுடியாத நிலையும் நெல்லிற்கான விலை தழம்பல்களும் அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாடும் மற்றும் யானைகளின் தொல்லை என்பவற்றினால்  எதிர்வரும் காலங்களில் நெற்செய்கையினை மேற்கொள்வது கேள்விக்குறியாகி வருவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

Related posts