மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி

 
பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும்  முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு    வெள்ளிக்கிழமை (6) காலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் தனது கருத்தில் 
 
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    பாடசாலைகளில் மாணவ  மாணவவிகளை  ஏற்றிச்செல்லும் ஒவ்வொரு சாரதிகளும் வீதி  சட்ட விதிமுறைகளை  பின்பற்ற வேண்டும்.
 
தற்போது உங்களின்  முச்சக்கரவண்டியில்    ஏற்றிச்செல்படுபவர்கள்   நாளைய தலைவர்களை என்பதை மனதில் நிறுத்தி  உங்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும்.
 
சில சாரதிகள்   கூடுதலான மாணவர்களை பணத்திற்காக ஏற்றிச்செல்லும்  நிலைமைகளை  தவிர்க்க முன்வர வேண்டும்.பொதுவாக முச்சக்கர வண்டி சங்கங்கள் இயங்குகின்றன.ஆனால் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் புதிதாக சங்கம் ஒன்றினை உருவாக்கி எமது போக்குவரத்து பொலிஸ் பிரிவுடன் ஒத்துழைக்க வேண்டும்.
 
மாணவ மாணவிகளின் உயிர்களுடன் முச்சக்கர வண்டி  சாரதிகள் விளையாடாது  உயிர்களின் பெறுமதியினை பற்றி சிந்திக்க வேண்டும் என வலுயுறுத்தி கூறினார்.
 
இதன் போது கல்முனை பிராந்தியத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள்கள் இவ்விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  

Related posts