மின்னேரிய கோரவிபத்தில் காரைதீவைச்சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை! படுகாயமடைந்தோருக்கு பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை தொடர்கிறது.

 
(காரைதீவு  நிருபர் சகா)
 

நேற்றுமுன்தினம்  (24) நள்ளிரவு மின்னேரியாவில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் காரைதீவைச்சேர்ந்த  யாரும் உயிரிழக்கவில்லையென வைத்தியசாலை வட்டாரத்தை தொடர்புகொண்டு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்கே.ஜெயசிறில் தெரிவித்தார்.

காரைதீவுப்பெண்மணி இவ்விபத்தில் உயிரிழந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தகாரணத்தினால் காரைதீவில் சிறுபரபரப்பு ஏற்பட்டது.காயப்பட்டவர்களது வீடுகளைநோக்கி மக்கள் படையயெடுத்தனர். வைத்தியசாலை வட்டாரத்தை தொடர்புகொண்டு விசாரித்தபோது அப்படி யாரும் உயிரிழக்கவில்லையெனத் தெரியவந்தது. அதன்பின்னர் மக்கள் அமைதியானார்கள்.
இப்பிழையான செய்தி தொடர்பாக அங்கிருந்தவர்கள் தவிசாளரிடம் முறையிட்டனர். அவர் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு நிவர்த்திப்பதாகக்கூறி அமைதிப்படுத்தினார்.

பொதுச்சுகாதார மருத்துவமாதுக்களான திருமதி குமுதினி புவனேந்திரராஜா   திருமதி தயா சசிகுமார் ஆகியோரே இவ்விதம் படுகாயமுற்றவர்களாவர். பொலநறுவை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்ப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்சமயம் பெண்கள் வார்ட்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.இவர்களில் திருமதி குமுதின என்பவருக்கு காலில் உடைவு ஏற்பட்டுள்ளதனால் சத்திரசிகிச்சைசெய்யப்படுகிறது. மற்றயவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் சிகச்சைஅளிக்கப்படுகிற்து. அங்கு சிறந்தசிகிச்சைஅளிக்கப்படுவதாக உறவினர் சி.நந்தகுமார் அங்கிருந்து தெரிவித்தார்.


கொழும்பில் புதனன்று(23) இடம்பெற்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவுபஸ்ஸில் கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளையில் இக்கோரவிபத்து சம்பவித்துள்ளது.
சாரதியின் பின்னாலுள்ள முன்வரிசை ஆசனத்தில் இவர்கள் அமர்ந்து பயணித்துள்ளார்கள். இவர்களுடன் மாவடிப்பள்ளியைச்சேர்ந்த மற்றுமொரு மருத்துவமாதும் காயமுற்றதாகத்தெரிகிறது.
இவ்விபத்தில் பஸ் சாரதி எம்.எம்.சலீம்(ஓட்டாவடி )ஸ்தலத்திலே மரணமானதாகவும் இருபஸ்களிலும்பயணித்த சுமார் 40பேரளவில் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விபத்து இடம்பெற்று மறுகணம் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அம்புலன்ஸ் மூலம்  பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக அங்குசென்ற காயப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கல்முனை பஸ் டிப்பாவின் சகலபஸ்களும் வெள்ளைக்கொடி ஏற்றியவண்ணம்நேற்று சேவையிலீடுபட்டன. டிப்போவிலும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தன.

Related posts