மீண்டும் வான் கலாச்சாரத்தில் கண்காணிப்பு பாதுகாப்பு அச்சத்தில் முன்னாள் போராளிகள்

மீண்டும் வான் கலாச்சாரத்தில் கண்காணிப்பு பாதுகாப்பு அச்சத்தில் முன்னாள் போராளிகள் ! அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்கின்றார் பு.த.வி.புலிகள் கட்சியின் தலைவர் கே. இன்பராசா 

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர்.  அவர்களும் சமூகத்தின் மத்தியில் ஓர் நடுநிலையான வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்றனர் ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அரச புலனாய்வுப்பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக கடந்த 25 ஆம்திகதி 69-1010 இலக்கமுடைய வான் மூலமாக தமதில்லத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்வகையில்   மட்டக்களப்பு கூட்டுறவுச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியளாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலும் தெரிவிக்கையில்…….
முன்னாள் போராளிகளாகிய நாம் பல வருடகாலமாக போர்புரிந்து இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசபடையினரிடம் சரணடைந்து பின்னர் இரண்டரை வருட காலமாக புனர்வாழ்வு என்ற பேரில் பல இன்னல்களை அனுபவித்து மீண்டும் நாம் சமூகத்தின் மத்தியில் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றிணைத்தால் அரச புலனாய்வுப் பிரிவினரின் இனந்தெரியா நபர்கள்  மூலமான வான்களில் பின்தொடர்ந்து செல்வது பல போராளிகள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 24 ஆம் திகதி எமது அரசியல் கட்சியின் மூலமாக அதாவது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினால் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு செய்வதற்காக முன்னாள் போராளிகள் முள்ளிவாய்க்கால் பொதுமக்கள் எமது கட்சி உறுப்பினர்கள் ஆகியோர்  ஒன்றிணைந்து தெரிவுக்குழு அமைக்கும் சந்திப்பினை முள்ளிவாய்க்கால் பகுதியில் நடாத்தியிருந்தோம்.
இச்சந்திப்பின் பின்னர் நான் மறுநாளாகிய  25 ஆம் திகதி வட மாகாணத்தில் வாகன நடமாற்றங்கள் இல்லாத கர்த்தால் நிலையில் மன்னார் சென்றதும் என்னைத் தேடி 69- 1010 இலக்கமுடைய வானில் எனது வீட்டிற்கு ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வந்திருந்தனர். நான் அப்போது வீட்டினுள் இருந்த வேளை எனது பெயரைக்கூறி திருமலையில் பதிவு உள்ளது மனைவி வைத்தியசாலையில் தொழில் புரிபவர் அரசியல் கட்சி நடத்துபவர் என பல விடயங்களைப் எனது வீட்டில் நின்ற எனது சகோதரனிடம் கேட்டனர் அப்போது அவர் என்னை வெளியில் வரவேண்டாம் என கூறியதன் பின்னர் அவர்களுக்கு பதில் கூறினார் அப்போது அங்கு வந்தவர்கள் அனைவரும் சிங்கள மொழியினையே பேசினர் பின்னர் அன்றைய தினமே எமது பிரிவு கிராமசேவகரிடம் சென்று எனது சுயவிபரங்கள் தொடர்பாக விசாரித்துவிட்டு இவ்விடயம் இரகசியமாக இருக்கட்டும் என கூறி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நான் அன்றைய தினம் 119 அழைப்பில் முறைப்பாடு கூறியிருந்தேன் மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான எஸ்.பியிடம் எமது கட்சியின் மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சி என்பவர் மூலம் சிங்கள மொழியில் கட்சித்தலைவர்க்கு இப்படியான பிரச்சனை ஒரு நடைபெற்றுள்ளது என கூறியிருந்தேன் அதற்கு அவர்கள் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்படி கூறியிருந்தனர். ஆனால் அதற்குரிய முடிவுகள் வரவில்லை அத்துடன் 69-1010 என்ற இலக்க வாகனத்தில் என்னை தேடி வந்திருந்தால் ஏன் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை என்பது எனக்கு ஒரு கேள்வியாகவே உள்ளது.

இதன் மூலமாக நான் மிகவும் மன உழைச்சலுடன் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளேன் காரணம் நாங்கள் தற்போது ஆயுத கலாச்சாரத்தை விட்டு ஜனநாயக ரீதியாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளோம் அரசியலில் நாம் கூறுகின்ற சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் மூலமாகவே அவ்வாரான நிலையில் எம்மை பின்தொடர்ந்து வீடுவரை கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் இது அரசதரப்பு பாதுகாப்பு படையினரின் செயலே ஆகும் நான் குறித்த இலக்கத்தை விசாரித்த போது அது அரசாங்கத்திற்கு சொந்தமாக வாகனம் என கூறினர் அத்துடன் அவ்வாகனம் வவுனியா இராணுவபுலனாய்வு அதிகாரிகளுக்கு சொந்தமான வாகனம் எனவும் அவர்கள் தான் வந்தனர் எனவும் அறியமுடிந்தது.

நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் கட்சியான எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குறல் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இப்படியான பிரச்சனைகளுக்கு இவ்வரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும் விசாரணை என்ற பேரில் எமது வீடு தேடு வந்தது தவறான செயல்.

இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்யவுள்ளேன் அந்தவகையில் இதுவரையில் எனது பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சத்திற்கு அரச தரப்பில் எந்தவித முடிவுகளும் வழங்கப்படாத தறுணத்தில் இன்று நான் ஊடகங்கள் மூலமாக இவ்விடயத்தினை வெளிக்கொண்டு வந்துள்ளேன்.
அத்துடன் எமது கட்சியின் சார்பில் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு நடாத்துவதற்கு முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பத்தினர் பிரதேச மக்கள் என பலரையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் செயற்குழு உருவாக்குயுள்ளோம் அதனடிப்படையில் அன்றைய நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகளை அவர்கள் மூலமாகவே நடாத்தவுள்ளனர்.
வேறு அமைப்புக்கள் மாணவர் ஒன்றியங்கள் அரசியல் கட்சிகள் தமது ஆதரவுகளை வழங்கமுடியும் ஆனால் செயற்குழுவில் சேர்ந்து செயற்பட முடியாது காரணம் கடந்தவருடம் வடமாகாண சபையின் மூலமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இணைந்து செய்த நிகழ்வு ஒரு குழப்பகரமாகவே அமைந்திருந்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போராடிய போராளிகள் பொதுமக்களின் துயரங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்ன தெரியும் அவர்கள் வெறுமனே பணம் சம்பாதிப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள அதாவது லண்டனில் உள்ள ஒருசில அமைப்புக்கள் மூலமாகவும் றெஜீ என அழைக்கப்படுகின்ற நளன் என்பவர் மூலமாகவும் செயற்படுகின்றனர்.
லண்டனில் உள்ள  றெஜீ என்பவர் மூலமாக தற்போதுவரை மே 18 நிகழ்விற்காக 50 லட்சம் ரூபாய்கள் சேகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவே அன்பார்ந்த மக்களே முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கான பணம் கொடுக்க வேண்டும் என்றால் தனிநபர்களுக்கு அனுப்பி வைக்காமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாட்டுக்குழுவின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கமுடியும் பொருட்களாக கொடுக்க முன்வருபவர்கள் தங்களது விருப்பத்துடன் வழங்கமுடியும் இல்லையேல் துயிலுமில்லங்களில் இருக்கின்ற பொருட்களை வைத்து நிகழ்வு செய்வதற்கு எமது நிர்வாக குழுவினர் தீர்மானித்துள்ளோம் இச்செயற்பாடுகள் அனைத்திற்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி ஆகிய நாம் உறுதுணையாக இருப்போம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts