மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை முஆரம்பித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள்  தமது சொந்த இடத்தில்  மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊறணி கனகர் கிராம மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் செயலாளர் வே. அருணாச்சலம் தெரிவிக்கையில்,
1981ம் ஆண்டு இலங்கை  அரசின் வர்த்தமானியில் 60 மைல் கொண்ட கிராமமாக கனகர் கிராமம் அன்றைய கால கட்டத்தில் இருந்த அரசினால் அறிவிற்கப்பட்டது. அதன் அடிப்படையில் அக்கால வீடமைச்சின் ஆரம்பக்கட்டமாக 30 வீட்டு திட்டம் குறித்த கனகர் கிராமத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதில் தமிழ்இ சிங்கள இரு மதத்தினை சேர்ந்த மக்கள்  விவசாயத்தினை தமது அடிப்படையாக்க கொண்டு வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 1990 ஆம்  ஆண்டு யுத்த சூழ் நிலையால் பிரஸ்தாப மக்கள் திருக்கோயில்  பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து. அதன் பின்னர் 2009 ம் ஆண்டு தமது சொந்தவிடமாக ஊறணி  கனகர் கிராமத்திற்கு  திரும்பிய வேளைஇ பிரஸ்தாப பிரதேசம் வனவிலங்கு இலாகாவிற்கும் இராணுவக்கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டிருந்தது.
பின்னர்  மீள் குடியேற்றத்திற்காக! கனகர் கிராமத்து மக்கள் அங்கு சென்ற வேளை உட்செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது.  பிரதேச செயலகம் மற்றும் வனவிலங்கு திணைக்களதம்இ  மாகாண சபைஇ பிரதமர் அலுவலகம் வரை சென்றிருந்தும் இன்று வரை மீள்குடியேற்றத்திற்கு உட்டபடுத்தப்பட வில்லை.
இப் பிரதேசத்தில்  இன்று வரை வனவிலங்கு திணைக்களத்தின் செயற்றிட்டங்கள் உட்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் காரணத்தினால்;  வனவிலங்கு திணைக்கள இலாக கிராமத்தினை மீள கையளிப்பதற்கு தடையாகவுள்ளதாக குறித்;த நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட போதிலே அவர்  இவ்வாறு   கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts