முஸ்லிம்களின் மிக முக்கியமான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின்  மிக முக்கியமான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய வகையில்  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்  என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான பைசல் காசீம் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிந்தவூரில் பிரதேசத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர்  இவ்வாறு தெரிவித்தார்.
 
இன்றைய அரசியலில் பணத்துக்காக தங்களுடைய வாக்குகளை விற்பனைக்கு இறங்கிறனர். இவ்வாறு இந்ந தேர்தலில் பணத்திற்கு சோரம் போனால்  எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு  ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது யார் இதற்கு குரல் கொடுக்ககூடிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே முஸ்லீம் சமூகத்துக்கு வருகின்ற சவாலை முறியடிக்கும் கட்சி என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
 
சமூகம்  என்பதற்காகத் தான் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அதன் உருவாக்கம் இன்றுவரை தழைத்து வளர்ந்து நிற்கின்றது இதனை அழிப்பதற்காக ஒரு கூட்டம்  அதுவும் சில முஸ்லிம் காங்கிரசில் இருந்து அதிலேயே வளர்ந்து அதிலேயே பிரிந்து சென்றவர்கள்  தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக எங்களை விட்டு பிரிந்து சென்று மறைந்த தலைவருடைய கட்சி அளிக்க வேண்டும் என்று இன்று இந்த கூட்டம் வந்து இருக்கின்றது.
 
சென்ற  தேர்தலில்  21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக நின்று போராடினோம் அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறினோம் இதெல்லாம் எதற்காக இந்த முஸ்லிம் சமூகத்திற்காகதான்  எமது  முஸ்லிம் சமூகம் அழியக் கூடாது என்பதற்காக  அன்று நாங்கள் எங்களுடைய அமைச்சுப் பதவிகளை திறந்தோம். இன்று நீங்கள் பணத்துக்காக பொருளுக்காக உங்களுடைய வாக்குகளை அளித்தால்  இவ்வாறு பாவிக்க சென்றால் எதிர்காலத்தில் இந்த சிறார்கள், இளைஞர், யுவதிகளின்  அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்துவது யார் இம்முறை தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள்.
 
அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளவதற்காகதான்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருடன்  பேசினோம் ஏதற்காக என்றால் மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்.கொள்ள அவர்களுடைய இருபதாரயிரம் வாக்கு கிடைக்க வேண்டும் இதன் மூலம் இலகுவாக நான்கு ஆசனங்கள் பெற்றுக்கொள்ளாம்  என்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதனை மறுத்து தனித்து போட்டியிடுகின்றார்கள் 
 
ஆனால் அவர்களின் அந்த வாக்கினை வைத்து கொண்டு இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டாவது சுற்றிலும் கூட ஆசனத்தினை பெறமுடியாது இதனை சிந்தித்து  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்புக்கு ஒற்றுமையாக வாக்களிப்பதன் மூலம் குறைந்து மூன்று முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
 

Related posts