வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – ஆழ் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

வளிமண்டல திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைவாக வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை ஏற்பட்டிருப்பதாக இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.

இது வலுவடையக் கூடிய நிலை காணப்படுவதாக தெரிகிறது. இது வடமேல் திசையை நோக்கி நகரக் கூடிய நிலை காணப்படுகிறது.இதனடிப்படையில் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தல்களை வழங்க விரும்பிக்கின்றோம். விஷேடமாக கடற்றொழிலாளர்கள் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க விரும்புகின்றோம்.

விஷேடமாக தங்காலையில் இருந்து அம்பாறை ,மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையில் கடல் பகுதிகளில் இன்று முதல் கடலுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தல் விடுக்கின்றோம்.ஆழ்கடல் பகுதிக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறும் நாம் சுட்டிக்காட்ட விரும்பிகின்றோம்.

விஷேடமாக 27 ,28 ஆகிய இரண்டு தினங்களில் இந்த நிலை வலுவடையும். 28 ஆம் திகதி இது தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேடமாக வடக்கு கழக்கு கடற் பகுதிகளில் இந்த நிலை காணப்படும். கிழக்கு வடகிழக்கு கடற் பகுதிகளை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று மணித்தியாலயத்திற்கு 75 மஅ- 80 மஅ வேகத்தில் காற்று வீசக்கூடும். மழைவீழ்ச்சியும் அதிகரிக்க கூடும். 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts