வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி வரவேற்கத்தக்கது – சுமந்திரன்!

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது பொறுப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதனை சரியான முறையில் எடுத்து செயற்படுத்தினால், வாழ்வதாரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.

மேலும் மங்கள சமரவீர முன்வைத்த இந்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது” என கூறினார்

Related posts