வட்ஸ் அமைப்பினால் பெரியநீலாவணை தொடர்மாடி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

வட்ஸ் (BUTS) அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை தொடர் மாடிப் பகுதியில் நடைபெற்றுவரும் இலவச வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு கிளை வட்ஸ் அமைப்பினால் அப்பியாசப் புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று அமைப்பின் செயலாளர்  எஸ்.சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.

வட்ஸ் அமைப்பானது பின்தங்கிய பிரதேசத்தில் வாழுகின்ற மாணவர்களை கல்வியில் உச்சநிலைக்குக் கொண்டுவருவதற்காக லண்டனில் மையமாக இருந்து தாங்கள் வட்ஸ் அமைப்பினை நிறுவி தாங்கள் வியர்வை சிந்தி உழகை;கும் பணத்தில் சிறுபகுதியைச் சேமித்து இலங்கை வாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் உதவி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக 2018 ஆம் ஆண்டு பெரியநீலாவணை தொடர்மாடிப் பகுதியில் மாலை நேர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அப்பியாயக் கொப்பி வழங்கிவைக்கும்;நிகழ்வில் வட்ஸ் லண்டன் அமைப்பின் பிரதித் தலைவர் எஸ். தயாபரன் பொருளாளர் எஸ்.தனிகாசலம், உறுப்பினர்களான சடாட்சரராஜ்,என்.ஜெபராஜ் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

All-focus
All-focus
All-focus

Related posts