வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களின் முக்கிய விடயங்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மனிதத்துவத்துக்கு  ஒவ்வாத குற்றங்கள்  தொடர்பாக – பக்கச்சார்பற்ற விசாரணைகளை சர்வதேசம் மேற்கொண்டு பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை வலியுறுத்தி –  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் – நீதி கோரி நாளை 19.03.2019 செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பேரணி  மற்றும் போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது. 


அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைவரும் மனமுவந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
கடந்த இரண்டு வருடங்களாக – தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு – நீதி வேண்டிய போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும். 
இத்தகைய தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாக – சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

பொன்னுத்துரை உதயரூபன்,
செயலாளர்,
கிழக்கு மாகாணம்.
இலங்கை ஆசிரியர் சங்கம்

Related posts