2437 ஆசி­ரி­யர்­க­ளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றது

மத்­திய மாகாண பாட­சா­லை­களில் 2437 ஆசி­ரி­யர்­க­ளுக்கு பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. மாகாண அமைச்சின் ஊடாக ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை தீர்த்­துக்­கொள்­வ­தற்கும் நிய­ம­னங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­மான சந்­தர்ப்­பங்கள் சம­கா­லத்தில் அரி­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. எனினும் மத்­திய அர­சாங்­கத்­தோடு பேச்­சுக்­களை நடத்தி தீர்வை பெறுவோம்.” என ­மத்­திய மாகாண தமிழ் கல்வி, விவ­சா­யத்­துறை, மீன்­பிடி, தோட்ட உட்­கட்­ட­மைப்பு, இந்து கலா­சார அமைச்சர் எம். ராமேஷ்­வ­ரன் ­தெ­ரி­வித்தார்.

ஹட்டன் எபோட்­சிலி தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் மத்­திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய கட்­டி­டத்தின் திறப்­பு ­வி­ழாவும், ராக­தீஸ்­வர கலை நிகழ்வும் பாட­சா­லையின் அதிபர் தலை­மையில் நேற்று இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்­வரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
“பல பாட­சா­லை­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை செய்­து­கொ­டுத்­துள்ளோம். தலைவர் தொண்­டமான் அமைச்­ச­ராக இருந்­த­பொ­ழுது அர­சாங்­கத்­தோடு பேச்­சு­வார்த்தை நடத்தி பல முறை ஆசி­ரியர் நிய­ம­னங்கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டன. ஆனால் இன்று ஆசி­ரியர் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. நிய­ம­னங்­களை பெற்­றுக்­கொள்­வ­த­கான சந்­தர்ப்­பங்கள் சம­கா­லத்தில் அரி­தா­கவே காணப்­ப­டு­கின்­றன.
மத்­திய மாகா­ணத்தில் 2437 ஆசி­ரி­யர்­க­ளுக்கு பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. இது தொடர்­பாக மாகாண முத­ல­மைச்­சரின் ஊடாக ஜனா­தி­ப­தியின் மூலம் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். கடந்த காலங்­களில் மலை­யக தோட்­டப்­புற பாட­சா­லை­க­ளுக்கு பாரிய நிதிகள் ஒதுக்­கப்­பட்ட போதிலும் அந்­நி­திகள் ஊடாக பாட­சாலை அபி­வி­ருத்­திக்­கென கட்­டி­டங்கள் அமைக்க காணி­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை இருக்­கின்­றது.

அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் ஐயா காலத்தில் தோட்டப் புறங்­களில் பாட­சா­லை­களை அமைத்­துக்­கொள்­வ­தற்கு காணி­களை இல­கு­வாக பெற்­றுக்­கொள்ளும் நிலை இருந்­தது. இன்று மலை­யக மக்­க­ளுக்கு ஒரு சிறந்த தலை­மைத்­துவம் இல்லாத காரணத்தினால் எல்லா விடயங்களிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் காலங்களில் அரசியலுக்கு அப்பால் சென்று நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்பொழுது தான் எங்கள் சமூகம் முன்னேற்றமடையும்” என்றார்.

Related posts