29 பிரதேச செயலகங்கள் தரமுயத்தப்பட்ட வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மாத்திரம் புறக்கணிப்பு

கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்த்தானாக மாற்றும் இனவாதிகளின் எண்ணம் பலிக்காது  வியாழேந்திரன் எம்.பி. பகிரங்கமாக சவால் விடுத்தார்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுவருவோரை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பொழுது இக்கருத்தினை முன்வைத்தார்.

தமிழினம் போராடிய இனம் போராட்டம் என்பது தமிழர்களுக்கு புதிதல்ல.  அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் நிலவளங்களை சூறையாடி இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற திட்டங்களில் ஒன்றுதான் கடந்த மூன்று தசாப்த்தங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
1993-07-28 அன்று 29 பிரதேச செயலகங்கள் தரமுயத்தப்பட்ட வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மாத்திரம் புறக்கணிப்பு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு விடை தெரியவேண்டும்.
எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டு முஸ்லிம் இராஜ்ஜியங்களை கட்டமைக்கின்றனர். இவர்கள்  கிழக்கு மாகாண மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற வேலையைத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்துவருகின்றனர்.
இனவாதியான முன்னாள் கிழக்கு ஆளுநர் அரசாங்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டு தங்களுக்கு ஏற்றாற்போல் அரசாங்கத்தை பயன்படுத்துகின்றார்.
கல்முனை பிரதேசத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஹரிஸ் தனது சேட்டைத்தனங்களை கைவிட்டு இருக்கவேண்டுமென எச்சரித்தார்.
தமிழர்கள் இனவாதம் பேசுபவர்களல்ல, இனவாதத்தையும் விரும்புகின்றவர்களுமல்ல எங்களது அடிப்படை உரிமையைத்தான் கேட்கின்றோம்.  இவை இன்றைக்குள் கிடைக்காவிடில் நாளை கிழக்கு மாகாணம் தழுவிய நிருவாக முடக்கத்தை அரசு எதிர்நோக்க நேரிடும் என எச்சரித்தார்.

Related posts