சிவஞானசுந்தரம் அவர்களால் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கும் சுவிஸ் உதயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர்  சிவஞானசுந்தரம் அவர்களால் கடந்த 21 ஆம் திகதி  கூட்டப்பட்ட கூட்டத்திற்கும் சுவிஸ் உதயம் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இக்கூட்டத்திற்கு சுவிஸ் உதயத்தின் செயலாளரோ,பொருளாளரோ,நிருவாக உறுப்பினர்களோ யாரும் கலந்துகொள்ளவில்லை என சுவிஸ் உதயத்தின் .நிருவாகக் குழுவினர் தெரிவித்தனர்

சுவிஸ் உதயம்  அமைப்பின் புதிய நிருவாகத்தெரிவு அண்மையில் தெரிவுசெய்யப்பட்டபோது தலைவராக சிவஞானசுந்தரம் தெரிவுசெய்யப்பட்டார். பின்னார் அவரது தன்னிச்சையான செயற்பாட்டாலும் சுவிஸ் உதயம் அமைப்பின் விதிமுறைக்கு அப்பாலும் செயற்பட்டமையாலும் அத்தோடு சுவிஸ் உதயம் அமைப்புக்கு இதுவரைக்கு எவ்விதப் பங்களிப்பும் செய்யவில்லை இவ்வாறான நிலையில் அவரை நீக்கியதுடன் புதிய தலைவராக டி.எல் சுதர்சன் தெரிவுசெய்யப்பட்டார். 

தற்போது டி.எல். சுதர்சன் அவர்களே தலைவரே தவிர சிவஞானசுந்தரம் அல்ல. இந்நிலையில் அவர் ஒருசிலரை அழைத்து சுவிஸ் உதயத்தின் நிருவாகக் கூட்டம் 21 ஆம் திகதி நடத்தியதாக அறிகின்றோம் .ஆனால் அக்கூட்டத்திற்;கும் எமது நிருவாகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை எங்களது செயற்பாடு வழமைபோல் நடைபெறுகின்றது என்பதனை மக்களுக்கு  தெளிவுபடுத்துகின்றோம் .அத்தோடு சுவிஸ் உதயம் அமைப்பு சரியான முறையில் இயங்கி வருகிறது  இதனை குழப்ப முனைய வேண்டாம் எனத் தெரிவித்தனர்

அத்தோடு சுவிஸ் உதயம் அமைப்புக்கு இதுவரையில் பங்களிப்புச் செய்தவர்களது விபரத்தினை இணக்கின்றேன் இதில் சிவஞானசுந்தரம்(சிவா) அவர்கள் எவ்வித நிதிப்  பங்களிப்பும் செய்யவில்லை என்பதனையும் இவருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்


Related posts