வெளிவாரி பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள், தமது தொழில் உரிமையினை வலிறுத்தி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அரசாங்கத்தால் 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படாததை கண்டித்தும் வெளிவாரி பட்டதாரிகளை உள்வாங்க கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பு என்பன இணைந்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
உள்வாரி பட்டதாரிகள்போன்று மிகவும் கஷ்டப்பட்டே தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்துள்ள நிலையில் தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளமையானது மிகவும் கவலைக்குரியது என, வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில், வீதிகளில் இறங்கி அதிகமாக வெளிவாரி பட்டதாரிகளே போராடியபோதிலும் இன்று தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும் வெளிவாரி பட்டதாரிகள் தெரிவித்தனர்.
வெளிவாரி பட்டமானது வேலைக்கு தகுதியில்லையென்று சொன்னால் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பினை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டன.

Related posts