தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருந்தபோதும் யுத்தம் அதனை சீரழித்துவிட்டது.

Editor
By Editor October 1, 2017 13:38

தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருந்தபோதும் யுத்தம் அதனை சீரழித்துவிட்டது.

கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தவர்களாக வாழ்ந்துவந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தினால் கல்வி பொருளாதாரம் அனைத்தும் சீரழிக்கப்பட்டு தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

வட கிழக்கில் முப்பது வருடமாக இடம்பெற்ற யுத்தத்த்pனால் தமிழ் மக்கள் அனைத்தினையும் இழந்து மீளெழுச்சி பெறமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கல்வி பொருளாதாரங்களை முன்னேற்றுவதற்காக அனைவரும் முன்னின்று உழைக்க வேண்டும் என சுவீஸ் உதயத்தின் சர்வதேசப் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தெரிவித்தார்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மண்டபத்தில் அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில்; சுவீஸ் உதயத்தின் கிழக்குமாகாண பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் பேசுகையில் கடந்த 50 வருடத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் எவ்வாறு அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்தார்களோ அந்த நிலையினை தற்போது அடையவேண்டும் இதனை அடைவதற்கு கல்விதான் பிரதான கருவியாகவும் ஆயுதமாகவும் இருக்கின்றது என்பதனை மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்

கடந்த கால வரலாற்றை நோக்கும் போது எமது சமூகம் கல்வி மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் பின்னடைவு கண்டுள்ளோம்.

இந்தப் பின்னடைவுகளில் இருந்து நாம் முன்னேறவேண்டும் அதிலும் கல்வியிலே அதிக அக்கறைகாட்டி கல்வியில் முன்னேறவேண்டும் அதற்காகத்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் எமது உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே சுவீஸ் உதயத்தின் மூலம் உதவிகளை வழங்கிவருகின்றோம்.

இந்த உதவிகளைப் பெறும் நீங்கள் எதிர்காலத்தில் நல்லதோர் தலைவர்களாக வந்து அனைவருக்கும் உதவிசெய்யவேண்டும் .

கல்வி கற்கும் போது பல கஷ்டங்களும் சவால்களும் வரும் அதனை எதிர்கொண்டு வெற்றிப்பாதைக்குச் செல்வதற்கான மனோநிலையினை ஏற்படுத்த வேண்டும் இந்தப் பாடசாலையின் அதிபராக இருக்கும் பாலசிங்கன் அவர்களும் உங்களைப்போன்ற மாணவப்பருவத்தில் பல கஷ்டத்தின் மத்தியில் கற்று உங்கள் பாடசாலையின் அதிபராக இருக்கின்றார்.
இதேபோன்று நீங்களும் கற்று நல்லதோர் பிரஜையாக நாட்டுக்குச் சேவையாற்றவேண்டும்.

நாங்கள் இந்த நாட்டில் வாழமுடியாத காரணத்தினால்தான் இங்கிருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது தற்போது நாட்டில் வழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது இந்நிலையில் சிறப்பாகக் கல்வி கற்கமுடியும் உங்களுக்கான உதவிகளை எம்மைப் போன்ற பலர் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர் என்றார்

 

Editor
By Editor October 1, 2017 13:38
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*