சுவிஸ் உதயம் அமைப்பினால் தையல் இயந்திரம் வழங்கிவைப்பு

Editor
By Editor October 2, 2017 14:28 Updated

சுவிஸ் உதயம் அமைப்பினால் தையல் இயந்திரம் வழங்கிவைப்பு

இரு கால்களும் நடக்கமுடியாது பாதிக்கப்பட்ட  குடும்பப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக சுவிஸ் உதயம் அமைப்பு தையல் இயந்திரம்  ஒன்றினையும் தையல் வேலைகளை தொடர்ந்து செய்வதற்காக துணிகளை கொள்வனவு செய்வதற்கான நிதிக்குரிய காசோலையினையும்  வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் சர்வதேசப் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தலைமையில் 30 ஆம் திகதி  சனிக்கிழமை நடைபெற்றது.
களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் வாழும் கணபதிப்பிள்ளை தேவமணி எனும் குடும்பப் பெண் தனது இரண்டு கால்களையும் இழந்து இருப்பதுடன் தனது கணவனையும் இழந்துள்ளார் இவருடைய பெண்பிள்ளையின் கல்வி நடவடிக்கைக்காகவும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கும் உதவி செய்யுமாறு சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் உதவி கோரியதற்கு இணங்க சுவிஸ் உதயம் அமைப்பினர் நேரடியாகச் சென்று அப் பெண்ணுக்கு தையல் இயந்திரத்தினையும் துணி கொள்வனவு செய்வதற்கான காசோலையினையும் வழங்கி வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் சர்வதேசப் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத ;தலைவர் மு.விமலநாதன் செயலாளர் பூ.பாலச்சந்திரன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்கள் பலர்கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுக்கான நிதி உதவியினை சுவீஸ்லாந்தில்
Winterthur  வதிவிடமாகவும் கொண்ட திரு. திருமதி சிவதாஸ். தர்ஸா தம்பதினர் வழங்கிவைத்துள்ளமை என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் உதயத்தினூடாக சித்தான்டி யோகா சுவாமி மகளீர் இல்ல மலசலகூடம், மற்றும் புணானை மைலந்தனை பகுதி நேர பாடசாலை கட்டிட  பனிகளுக்கும் முழு ஆதரவு தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த  நிகழ்வின்போது  எதிர்பாராத விதத்தில் ஜேர்மனில் வசிக்கும்  ப. ரமணன் அவர்கள் கலந்துகொண்டதுடன் அப் பெண்ணின் நிலையினை அவதானித்து அவர்களுக்கு பண உதவியினையும்  வழங்கிவைத்தார் .

அத்தோடு இந்த உதவியினை வழங்கிய சுவிஸ் உதயம் அமைப்புக்கு  க. தேவமணி நன்றிதெரிவித்துள்ளார்

Editor
By Editor October 2, 2017 14:28 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*