சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட நிருவாக சபைக் கூட்டம்

Editor
By Editor February 23, 2016 13:11 Updated

சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட நிருவாக சபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் விஷேட நிருவாக சபைக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.02.2016) சுவிஸ் பேர்ன் நகரில் இடம்பெற்றது.

இதன்போது அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடல் இடம்பெற்று கீழ்வரும் விடயங்கள் பற்றிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

அமைப்பின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்து எமது கிழக்குப் பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதுடன் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கென கடந்த காலங்களை விடவும் கூடுதல் நிதியினை ஒன்று சேர்த்து அதிகமான மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் செயற்படல் எனவும், எமது அமைப்பினரின் நலனை விடவும் நம் சார்ந்த மக்களின் நலனுக்காக சுவிஸ் உறவுகள் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டன.

இது தவிர,  சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உதவிகளுக்கான கொடுப்பனவு, பல்கலைக்கழக மாணவர்களின் மேம்பாட்டுக்கான உதவிகள், சுயதொழில் ஊக்குவிப்புச் செயற் திட்டம், விஷேட தேவையுடையவர்களை வாழ்வில் சம அந்தஸ்த்துடன் ஏனையவர்ளும் மதிக்கும் வகையிலான அமைப்பின் செயற் திட்டத்திற்கான கொடுப்பனவுகள் என்பன பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் வருடாந்தக் கணக்கறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்பமாகும்.

20160221_155022 20160221_155040 20160221_172435 20160221_172453 20160221_172539 20160221_172544

 

Editor
By Editor February 23, 2016 13:11 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*