இன்று கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் இலங்கநாதன் ஓய்வு.

கல்முனை வலய கணித பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் சீனித்தம்பி இலங்கநாதன் இன்றுடன் (25-சனிக்கிழமை) தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுகிறார்.
 
காரைதீவைச்சேர்ந்த திரு.இலங்கநாதன் கல்விச்சேவையில் 32வருடகால சேவையினைப்பூர்த்திசெய்தவராவார். கல்முனை நற்பிட்டிமுனையில் பட்டதாரி ஆசிரியையான திருமதி விஜயலக்ஸ்மியை     கரம்பிடித்த அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
 
பேராதனைப்பல்கலைக்கழக பௌதீகவிஞ்ஞானத்துறைப்பட்டதாரியான இவர் 1988முதல் அக்கரைப்பற்று மற்றும்  சம்மாந்துறை முஸ்லிம்மத்திய கல்லூரி கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மருதமுனை சம்ஸ் மத்தியகல்லூரி காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 2012வரை  விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார்.
 
பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் கணித பாட ஆசிரியஆலோசகராக 2012இல் நியமனம்பெற்று 2017முதல் இன்று ஓய்வுபெறும்வரை கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினார்.
இவர் கல்வித்துறையில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவராவார்.
 
இவரது சேவைக்காலத்தில் கல்முனைவலயம் கணிதபாடத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியைக்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Related posts