இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு உதவித்திட்டம்

இரண்டு பிள்ளைகளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் உறவுகளால் உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 6 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நரிப்புல் தோட்டத்தில் இடம்பெற்றது.

ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில்  உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நரிப்புல் தோட்டம் என்னும் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த 5 தாய்மாருக்கு முதல் கட்டமாக தலா ரூபாய் 10,000 வழங்கி வைக்கப்பட்டதுடன் அந்த குழந்தைகளுக்கு 18 வயதுவரை மாதந்தோறும் தலா ரூபாய் 1000 ரூபா வைப்பு செய்யும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

அதன்பின் மேலும் இத்திட்டத்தின்கீழ் மகிழவட்டவான் பங்குடாவெளிஇநெல்லூர், மணிபுரம்,தளவாய் ,புலயவெளி, விழாவட்டவான்இமற்றும் சொறுவாமுனை ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்க பட்டதுடன் இதுவரை மொத்தமாக 63 தாய்மார்கள் உதவி தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது 

இத் திட்டம் ஆரம்பித்து 4 ஆவது வருடத்தில் காலடிபதித்த நிலையில இன்று 06-05-2020 மேலும் 9 தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்க பட்டுள்ளனர் இதில் 4 தாய்மார்களுக்கு தலா 10,000 ரூபா வழங்கிவைக்கப்பட்டன இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.ஹரிகரராஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு இவ் உதவியினை வழங்கிவைத்தனர்

தற்போது இத்திட்டத்தின் மூலம் 72 தாய்மார்கள் உதவி தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது இத்திட்டத்திற்கு உதவி செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்

தற்போது இருக்கும் அசாதாரண நிலையிலும் முன் வந்து இத்திட்டத்திற்கு உதவி செய்த அனைத்து நண்பர்களும் இத்திட்டத்தின் அமைப்பாளர் சுவிஸ் வாழ் அமிர்தலிங்கம் நன்றியை தெரிவித்ததுடன் மேலும் இத்திட்டத்தினை தொடர்ந்து மற்றைய கிராமங்களுக்கும் விரிவுபடுத்தி பிறப்பு வீதத்தை அதிகரிக்க உதவிகளை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறோம்

????????????????
????????????????

Related posts