முல்லை. மக்களின் போராட்டம் நியாயமானது: நீதிமன்றம் அறிவிப்பு

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை தவறு என்ற போதிலும், மக்களின் போராட்டம் நியாயமானது என முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்ததாக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

கடற்தொழிலாளர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மாகாண சபை உறுப்பினர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”குறித்த அலுவலக தாக்குதல் தொடர்பாக உரியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இவ்வாறான போராட்டங்களின்போது எம்மை கலந்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நீதிபதி பணித்தார்.

எவ்வாறாயினும் இந்த மக்களின் போராட்டம் நியாயமானது” என்றும் நீதிபதி தெரிவித்ததாக ரவிகரன் மேலும் குறிப்பிட்டார்.

Related posts