நாட்டுப்பற்றாளர் கறுத்தான் வடிவேல் அவர்கள் தமிழ் இனத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்

நாட்டுப்பற்றாளர் கறுத்தான் வடிவேல் அவர்கள்  தமிழ் இனத்தின் முன்னோடியாக திகழ்ந்து வாழ்ந்துகாட்டியவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை எழில் ததும்பும் படுவான்கரைப் பெரு நிலப்பலப்பின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பசுமை நிறைந்த பகுதிதான் தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமமாகும்.

அக்கிராமத்தைப் பெறுத்தவரையில் விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றை பிரதான தொழிலாக கொண்டமைந்து காணப்படுகின்றது. இக்கிராமத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளரான கறுத்தான் வடிவேல் கடந்த 10.07.2018 அன்று இயற்கை எய்தினார்.

அவரது அவரது மரணச் செய்தி கேட்டு அப்பிரதேசமே சோகத்தில் மூழ்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அப்பிளாந்துறைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கறுத்தான் வடிவேல் அவர்கள் ஆரம்பத்தில் களுமுந்தன்வெளி எனும் கிராமத்தில் வசித்து வந்து பின்னர் 1978 ஆம் ஆண்டு முதல் தும்பங்கேணி இளைஞர்விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். ஆரம்பத்திலிருந்தே பல இன்னல்களுக்கு மத்தியிலும் பல தமிழ் பணிகளையும், சமயப் பணிகளையும். சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வந்த அவர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டு வந்தார்.

அக்கிராமத்திலுள்ள ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தின் உப தலைவர், சங்காரவேல் சனசமூக நிலையத்தின் பொருளாளர், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், கருங்கல் உடைப்புச் சங்கத்தின் செயலாளர், என கிராம மட்டத்திலுள்ள பல பொது அமைப்புக்களில் பிரதான நிருவாகப் பெறுப்பை ஏற்று அக்கிராம மக்களை செவ்வனே வழிநடாத்தியுள்ளதோடு, பிரதேச மட்டத்திலுள்ள பாற்பண்ணையாளர் அமைப்பு, கல்நடை வளர்ப்பாளர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு என பல்வேறுபட்ட அமைப்புககளிலும் அங்கம் வகித்து பல சமூக சேவைகளை அப்பகுதிவாழ் மக்களுக்காக மேற்கொண்டு வந்துள்ளதுடன் இன்னும் பல பொது அமைப்புக்களுக்கு ஆலோசகராகவும் இருந்து செயற்பட்டு வந்துள்ளார்.

இவற்றினைவிட இந்து சமயத்தின் தேவார இதிகாச புராணக் கதைகளை முடிந்தவரைக் கற்று ஆலயங்கள்தோறும் தேவார பாராயணம் செய்து சமயத்தொண்டினையும் மேற்கொண்டு வந்துள்ளர்.

கடந்த காலத்திலிருந்து சமய சமூகத் தொண்டுகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 10.07.2018 அன்று அவர் இயற்கை எய்தினார். இவரது மரண செய்தி கேட்டு அவரை அறிந்த, அவரது சேவையை உணர்ந்த பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், சமூகசேவையாளர்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், என  பலரும் திகைத்துப்போய் நின்றனர், இந்நிலையில் அவரது கடந்த கால சமூக சேவைக்கு மகுடம் சூட்டும் வகையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அவருக்கு நாட்டுப்பற்றாளர் எனும் பட்டம் சூட்டி கௌரவித்துள்ளார்.

நாட்டுப்பற்றாளர் வடிவேல் அவர்கள் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை, அவர் பின்பற்றிய நன்நடத்தைகளை வளர்ந்து வரும் இளைஞர் சமூதாயமும் பின்பற்றி அவற்றைக் கைக்கொள்ளுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் சமூகம் மேலும் விருத்தியடையும் எனலாம்.

Related posts