விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வட மத்திய மாகாண மேல் நீதின்றம் தலா 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு இராணுவ படைகளின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட 8 பேரை வில்பத்து தேசிய பூங்காவில் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த இருவருக்கே இன்றைய தினம் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் தமது 5 குற்றங்களையும் ஒப்புக்கொண்டதால், ஒரு குற்றத்திற்கு ஐந்து வருடம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த தண்டனை 5 வருடங்களில் கழியும் வகையில் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts