பிரித்தானியர்களிடத்திலிருந்து எமது நாட்டினை மீட்பதற்கு எங்களது தமிழ்த் தலைவர்களும் பல தியாயங்களை செய்திருக்கின்றார்கள்



ஐ.தே.கட்சியின் பிரதம அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி
எங்களது நாட்டின் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நிலைநாட்டும் முகமாக பிரித்தானியர்களிடத்திலிருந்து எமது நாட்டினை மீட்பதற்கு எங்களது தமிழ்த் தலைவர்களும் பல தியாகங்களை செய்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கியதேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவில் 71வது சுதந்திர தின நிகழ்வு களுதாவளை பொதுவிளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் வில்வரெத்தினம்-சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

வட கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகாலங்களாக இருந்து வரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதுதான் இந்த நாட்டில் அனைவரும் இந்த சுதந்திர தினத்தினை பூரணமாகவும் ஐக்கியமாகவும் கொண்டாடமுடியும்.நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வினை இரண்டு தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு அவர்களே தாமாகவே சுயநிர்ணைய அடிப்படையில் அவர்கள் வாழக்கூடிய அரசியல் சாசணத்தினை ஏற்படுத்தவேண்டும் அது இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிலையான நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்த அரசாங்கம் மூன்று வருடங்களாகியும் ஆட்சிக்கு வந்து இந்த அரசியலமைப்பினை நிறைவேற்றத் தவறிவிட்டது. இந்த அரசியலமைப்பினை பத்தொன்பதாவது சரத்தினை கொண்டு வந்த வேளை இதனை நிறைவேற்றிருக்க முடியும் ஆனால் ஐக்கியதேசிய கட்சி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் இதய சுத்தியுடன செயற்படுவதை நான் வரவேற்கின்றேன்.

கடந்த எழுபத்தொரு வருடங்களாக வடகிழக்கில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக வாழ்ந்து வருகின்றார்கள் நாட்டின் சுதந்திரத்தினை பெறுவதற்கு தமிழ் தலைமைகள் அரும்பாடு பட்டிருந்தனர்.அனால் இன்று வரை தமிழ் மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டே வருகின்றார்கள். இன்று பாருங்கள் எமது நாட்டில் முப்பது வருடங்களாக நடைபெற்று முடிந்த யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர்இயுவதிகள் கைதிகளாக இன்றுவரை சிறைகளில் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இது மிகவும் மனவருத்தத்தை தருகின்றது. இன்றுவரை தமிழ் தேசியக்கூட்டமைப்போ அல்லது ஆட்சியல் இருக்கின்ற அரசாங்கமோ இவர்களை விடுவிப்பதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இன்று பாருங்கள் இந்த நாட்டில் பல பிரதேசங்களில் பல குற்றமிழைத்த பல கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பளிக்கப்படுகின்றது ஏன் இவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியாதா.

ஆனால் அன்று எமது தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக போராடியவர்கள் எல்லாம் சிறையில் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களளுக்கு நிரந்தரமான இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் காணிகள் எல்லாம் உரியவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அத்தோடு ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தினால் ஊனமுற்றுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் ஒரு தெளிவான திட்;டத்தினை செயற்படுத்த வேண்டும். அத்தோடு இவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் முன்னுரிமையளிக்கபட்வேண்டும்.பாடசாலைகளையோஇகட்டடங்களையோஇவீதிகளையோ புனரமைப்பதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றபட்டுள்ளது என்று இந்த அரசாங்கம் நினைக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

Related posts