பழங்குடியினர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் இன மக்களின் கல்விமேம்பாட்டிற்காக சுவீஸ் உதயம் அமைப்பு பல உதவிகளை முன்னெடுப்பதற்காக தயாராக இருக்கின்றது

Editor
By Editor June 6, 2017 14:48 Updated

பழங்குடியினர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் இன மக்களின் கல்விமேம்பாட்டிற்காக சுவீஸ் உதயம் அமைப்பு பல உதவிகளை முன்னெடுப்பதற்காக தயாராக இருக்கின்றது

பழங்குடியினர்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் குறவர் இன மக்களின் கல்விமேம்பாட்டிற்காக சுவீஸ் உதயம் அமைப்பு பல உதவிகளை முன்னெடுப்பதற்காக தயாராக இருக்கின்றது என சுவிஸ் உதயத்தின் சர்வதேசப் பொருளாளர் பிரபல சமூகசேவகர் க. துரைநாயகம் தெரிவித்தார்

பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும்  அலிக்கம்பை கிராம மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு காஞ்சிரங்குடா அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில்  அதிபர் எஸ்.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்நிகழ்வின் போது  அப்பாடசாலையில் கல்விகற்கும் தரம் 1-5 வரையான 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது அதேவேளை பாடசாலைக்கு சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் இருந்து வருகைதரும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கான உதவியினை வழங்குமாறு பெற்றோர்களும் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இம் மாதத்தில் இருந்து பருவகால சீட்டினை (சீசன் டிக்கட்) பெற்றுக் கொடுப்பதற்கு சுவிஸ் உதயத்தின் தலைவர் செயலாளர் மற்றும் அங்கத்தவர்களுடன் பேசியதன் பின்னர்  நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவ்வமைப்பின் கிழக்குமாகாணப்பொருளாளர் ஓய்வுநிலை அதிபர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

அவர் மேலும் பேசுகையில் பழங்குடியினர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற இம் மக்களின் கல்வி கடந்தகாலங்களில் பின்னடைவாக இருந்தாலும் இன்று அச்சமூகத்தின் கல்வி மேலோங்கியதாகக் காணப்படுகிறது இவர்களின் பேச்சுவழக்கு  நாம் பேசுவது போல் இல்லை அவர்களது பேச்சில் வித்தியாசம் காணப்படுகிறது அது அவர்களின் பரம்பரையான பேச்சுவழக்காகவே காணப்படுகிறது.பாடசாலையில் கல்விபயிலும்போது தமிழைக் கற்கின்றனர் வெளியிலே  அவர்களுடைய  சமூகத்தினரோடு பேசும்போது அவர்களுக்கு உரித்தான மொழியில் பேசுகின்றனர் இவ்வாறு வாழும் இம் மக்களின்  கல்வி மேம்பாட்டிற்காக இப்பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களினதும் அதிபரினதும் பங்களிப்பு மேலானதாகவுள்ளது

இவ்வாறு வாழும் இச்சமூகத்தின் வளர்ச்சிக்காக சுவிஸ் உதயம் பல உதவிகளைச் செய்வதற்குத் தயாராக உள்ளது

இப்பிரதேசத்தினையும் இங்குவாழும் மக்களையும் பார்க்கின்றபோது யாரும் உதவிசெய்வதற்கு முன்வரவில்லையோ என்ற எண்ணம்  எனக்குத் தோன்றுகின்றது.

 இச்சமூகம் பலவழிகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் இவ்வாறானவர்களுக்கு உதவுவதில் யாரும் பின்னிக்கக் கூடாது. இச்சமூகத்தையும் ஏனையசமூகங்களைப் போன்று கௌரவமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை செய்துகொடுக்கவேண்டும் அதற்காக சுவிஸ் உதயத்தின் உதவிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்றார்.

Editor
By Editor June 6, 2017 14:48 Updated
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*