அகத்தியர் வித்தியாலய மாணவர்கள் நான்குபேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை

 

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அகத்தியர் வித்தியாலய மாணவர்கள் நான்குபேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் சிதம்பரப்பிள்ளை தெரிவித்தார்
இதில் ஜெ.டர்சிக்கா 163 புள்ளி ச.தர்ஷித் 156 புள்ளி அ.திஜக்ஷா 151 புள்ளி ச.சுபாஸ்ரிக்கா 149 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவரும் 100 வீதச் சித்திபெற்றுள்ளனர்
அதேவேளை கற்பித்த ஆசிரியர் குணசீலன் மற்றும் மாணவர்களை அதிபர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.

Related posts