ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம்

எஸ்.சபேசன்

மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கணணி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் ரி.சுதர்சன் அவர்களது பிள்ளைகளினால் இக் கணணி உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த  இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் மு.விமலநாதன் கிழக்குமாகாணக் கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன்; செயலாளர்  றோமிலா செங்கமலன் உபதலைவர் கணவரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இவ் உதவியினைச் செய்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் நன்றிதெரிவித்துள்ளனர்

Related posts