சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்

 
(எஸ்.குமணன்)
 
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கைதான சந்தேக நபருக்கு   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்ககுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 
 
செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
பின்னர் குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புதன்கிழமை(28)   எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட. சந்தேக நபரை எதிர்வரும் செப்ரம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
 
இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.
 
 
மேலும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும்  சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts