சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன்  திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழித் தொடர்பாடல் பயிற்சி பாடநெறியை பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்  வழிகாட்டலின் கீழ் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எஸ். நிருபா  தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் ஏ.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 
 
இந் நிகழ்வில் பாடநெறியின் வளவாளரான  சுதேஷ் ருஷாந்தன்  மற்றும்  பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts