சுவிஸ் உதயம் அமைப்பினால் மண்டானை மாணவர்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு

(சா.சபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டானை  அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் அவர்களது பிறந்தநாளினை முன்னிட்டு 50 மாணவர்களுக்கு இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இப்பாடசாலையின் தேவைகருதி சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உப பொருளாளர் பேரின்பராஜா அவரது பாரியார் பானு  தம்பதியினர்களினால் ஒருதொகை நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த தாய்ச் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் இலங்கைக்கான இணைப்பாளரும் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தாய்ச்சங்கத்தின் உபபொருளாளர் வி.பேரின்பராஜா அவரது பாரியார் திருமதி பானு பேரின்பராஜா மற்றும் கிழக்குமாகாணக் கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப் பாக்கியன்; செயலாளர்  றோமிலா செங்கமலன் உறுப்பினர் அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts