சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகசபைக் கூட்டம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் போரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள உப அலுவலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு அமைப்பின் செயலாளர் திருமதி றோமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பிரதித் தலைவர் கண வரதராஜன் உட்பட அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர் இக்கூட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய பல விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts