சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் மிளகாய் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை திறந்துவைக்கும் நிகழ்வு

பனிச்சையடி திராய்மடுவில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் மிளகாய் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை திறந்துவைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் 04.04.2024 திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச் சங்க தலைவர் டி.எல். சுதர்சன் தாய்ச் சங்க பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் மற்றும் தாய்ச்சங்க உறுப்பினர் எட்வட் சிறி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் அமைப்பின் கிழக்கு கிளை செயலாளர் திருமதி.ரொமிலா செங்கமலன் பொருளாளர் ம.ஹருஸ்ராஜ் மற்றும் நிருவாக உறுப்பினர் மு.அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் காலங்களில் சுத்தமானதும் தரமானதுமான மிளகாய்த்தூள் மற்றும் அரிசி மாவு என்பனவற்றை குறைந்த விலையில் எமது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Related posts