செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்

நியூயார்க், ஏப்.11:

செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரமாகிறது.

அதிக எரிபொருட்களை எடுத்துக் கொள்கிறது. மேலும் இது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை. எனவே இதை கைவிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

அதற்குப் பதிலாக ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் வரை தான் அளவு இருக்கும்.

இந்த தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம். 20-க்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்கள் அனுப்பப்பட உள்ளன.

இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிக குறைவாகும். இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

Related posts