திருக்கோணேஸ்வரத்தை பெருங்கோயிலாக புனரமைப்பு செய்ய இந்திய அரசு உதவும்

“திருக்கேதீஸ்வரத்தைப் புனரமைப்பு தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்.” என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

திருக்கோணேஸ்வரரின் புனித பூமியில் இன்று (02.11.2023) இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். ஆலய நிர்வாகிகள் அவரை வரவேற்று உரையாடினர்.

Related posts