மட்டக்களப்பில் 2022/2023 ஆண்டிற்கான தேசிய ஆக்கத் திறன் விருதுகளுக்கான மாவட்ட மட்ட போட்டிகள்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்  2022 /2023 தேசிய ஆக்கத் திறன் விருதுகளுக்கான மாவட்ட மட்ட போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ்   மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகத்தின் ஒழுங்கமைப்பில், பிரதேச கலாசார உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்   மட்/ மகா ஜன கல்லூரியில் இன்று (19) இடம் பெற்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 வது ஜனன தினத்தை முன்னிட்டு பல போட்டிகள் இடம்பெற்றது.


இந்துக்களின் கலை கலாசார பாரம்பரிய விழிமியங்களை பறைசாற்றும் வகையில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

இதன் போது  வில்லுப்பாட்டு, கதா பிரசங்கம், பேச்சு, பண்ணிசை பாரதநாட்டியம், நாடகம், நீதி நூல் ஒப்புவித்தல் போன்ற பல போட்டிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

 
 

Related posts