வரலாற்றில் முதல்தடவையாக மருத்துவத்துறைக்குத் தெரிவாகி சாதனை படைத்த அபினேஸ்

எஸ்.சபேசன்

வெளியான க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்  சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய  மாணவன் துரைரெத்தினம் அபினேஸ் வரலாற்றில் முதல்தடவையாக மருத்துவத்துறைக்கு தெரிவாகி சாதனை நிலைநாட்டியுள்ளதாக அதிபர் எம்.தருமலிங்கம்தெரிவித்தார்

இப்பாடசாலையானது 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபாடசாலையாகும் இங்கு கற்று இம்மாணவன் சாதனை படைத்துள்ளதுடன் நகர்புறப் பாடசாலைகளுக்குச் செல்லாது தரம் ஒன்றில் இருந்து உயர்தரம் வரை இப்பாடசாலையில் கற்று 2 A 1B சித்தியினைப்பெற்று மாவட்டமட்டத்தில் 48 நிலையினையும் பெற்றுள்ளார்இதேவேளை  இப்பாடசாலையின் அதிபர், முன்னாள் அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவனின் தந்தை துரைரெத்தினம் (மதி) நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

Related posts