விவேகானந்தா மகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 3 ஏ.சித்தி பெற்று சாதனை

வெளியாகிய 2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக்கோட்டத்தில் உள்ள விவேகானந்தா மகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கலைப்பிரிவில் 3 ஏ.சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் மா.தர்மலிங்கம் தெரிவித்தார்
இதில் ஏ.தனுஸ்,பி.பேணுஜன்,எஸ்.நிதுர்ஸ்கா ஆகியோர் 3 ஏ சித்திபெற்றுள்ளதுடன் 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி இருப்பதுடன் 97 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து இருப்பதாக அதிபர் தெரிவித்தார்
அதேவேளை சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் பாராட்டுத்தெரிவித்துள்ளார்

Related posts