ஆலய நிர்வாகத்தினருக்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு. நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய,பிரதமகுருக்கள்,14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயம் 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகத்தினருக்கெதிராக நீதி மன்றத்தில் வழக்கு. நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய,பிரதமகுருக்கள்,14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(8)சுகாதார தரப்பின் சுற்றுநிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் கலந்துகொண்ட 500க்கு மேற்பட்ட அடியார்களை தனிமைப்படுத்த சுகாதார தரப்பினர் பொலிசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.இதேவேளை இடம்பெற்ற இவ் சம்பவம் சம்மந்தமாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க இன்று(9) இடம்பெற்ற மண்முனை வடக்குகான கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தேசிய ரீதியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளானதால் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மண்முனை வடக்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.கிரிசுதன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் இணைத்தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆலய நிர்வாகத்திற்கு கடந்த கொவிட் செயலணி கூட்டத்தில் வழங்கப்பட்ட சுற்று நிரூபத்தை மீறி எதுவித முற்பாதுகாப்பும் இன்றி ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொண்ட இச்சம்பவமானது நகரின் பாரிய கொவிட் கொத்தணியை உருவாக்க உள்ளதாகவும்,இதனால் 100பேருக்கு வழங்கிய அனுமதியை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இவ் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேளவிக்குறியாக்கியுள்ளதாக வைத்தியர் கிரிசுதன் இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இன்று முதல் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிசிச்சையளிப்பது சம்மந்தமாகவும் வைத்தியர் அவர்களால் இச் செயலணிக்கு எடுத்துரைக்கப்பட்டது.மட்டு மாநகர பிரதி ஆணையாளர் கே.சிவராஜா,மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனனர்.

Related posts