இலங்கையில் எதிர்வரும் 10 மாதங்களுக்குள் அதிவேக அபிவிருத்தி; ஐ.தே.க சூளுரை!

ஆட்சி அதிகாரம் மீண்டும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதால் எதிர்வரும் 10 மாதங்களுக்குள் அதிவேக அபிவிருத்தியொன்றை நாட்டில் ஏற்படுத்தப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

கொழும்பு, கொளன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்றது ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் வீடமைப்பு, கட்டடநிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாரச இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார்.

சஜித் – “அரச அதிகாரம் எனும் கரண்டியின கைகளில் எடுத்து அதனைக் கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான சேவைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பிரதான அரசியல் கட்சியென்ற ரீதியில் நாம் அதிவேக அபிவிருத்தியொன்றை எதிர்வரும் 10 மாதங்களில் மேற்கொள்ளவுள்ளோம். தற்போது ஆட்சி அதிகாரம் என்ற கரண்டிகள் நம் கைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

தற்பொது நாம் பட்டினி கிடந்தாவது எமது மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும். மிகப்பெரிய பொருளாதார கோட்பாடுகளுக்குள் துழைந்து அது கிடைக்கப்பெறுமா கிடைக்கப்பெறாதா என வினவிக்கொண்டு காலத்தை வீணடிக்க முடியாது. அப்படி நாம் செய்ப் போவதும் இல்லை. ஒன்று வேலைத்திட்டங்களை செய்வோம். அவ்வாறல்லாதவிடத்து நான் என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்று விடுவேன்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றிலும் தூற்கடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எனினும் சில முக்கிய அரச அலுவலகங்கள், மற்றும் திணைக்களகங்களின் அதிகாரங்களை ஒப்படைக்க தொடர்ந்தும் மறுத்து வருகின்றார்.

அதேவேளை ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனைகளையும் விதித்து மைத்ரிபால சிறிசேன அழுத்தங்களையும் பிரயோகித்து வரும் நிலையில், அவருடன் முரண்பட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான அபிவிருத்தியை செய்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிறேமதாச கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்:டுள்ளார்.

Related posts