களஞ்சியப்ப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மகாபோகத்தின் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்ப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி லங்கா சதொச நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
 
மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில்  நடை பெற்ற விசேட கூட்டத்தில் கடந்த நவம்பர் 28ம் திகதி திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்திற்கு அமைய களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக பொருத்தமான அரிசி ஆலைகளினூடாக பொது ஒப்பந்த அடிப்படையில் உயர்தரத்தில் அரிசியாக்கி சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய இந்நடவடிக்கை இம் மாவட்டத்தில் அமுல் படுத்தப்படவுள்ளது.
 
இதன்படி அம்மாவட்டத்தில் களஞ்சியபடுத்தப்பட்டிருந்த சுமார் 1300 மெற்றிக்தொன் நெல்லை அரிசியாக்குவதற்காக தகுதிவாய்ந்த அரிசியாலைகளுக்கு வழங்குவதற்கும் இன்று தீர்மானிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயபணிப்பாளர் வை.பி இக்பால் பிரதம கணக்காளர் கே.Nஐகதீஸ்வரன் மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் நெல் சந்தைப்படுத்தும் சபைகளின் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட தகுதியான அரிசிஆலை உரிமையாளர்கள் பலரும் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.
 
இம் மாவட்டத்தில் புலிபாய்ந்தகள் மணல்பிட்டி முள்ளாமுனை கரடியனாறு போரதீவு ,அரசடிதீவு ,கஐவத்தை ,களுவாஞ்சிகுடி ஆகிய 8 களைஞ்சிய சாலைகளில் நெல்சந்தைபடுத்தல் சபை கொள்வனவு செய்திருந்த நெல்லையே இவ்விதம் அரிசியாக்கி சத்தோச நிறுவனத்திற்கு ஒப்படைக்கபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பணியினை பொருப்பேற்கும் தனியார் அரிசியாலை நிறுவனஉத்தியோகத்தரகள் அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செவ்வேன நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் எனவும் அதிகாரிகள் தமது மேற்பார்வை கடமைகளை சிறப்பாக அமுல் நடத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இன்றைய விசேட கூட்டத்தில் அறிவுருத்தல் செய்தார்.

Related posts