கிளினிக் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம்  (29) வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 
 
மேலும் இந்நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது வைத்தியசாலைக்கு வருபவர்கள் சமுக இடைவெளியைப்பேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும், அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார். 
 

Related posts