சுற்றாடலைப் பாதுகாப்போம் செயலமர்வு

சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குளிரூட்டல் வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் பற்றிய
விழிப்புணர்வூட்டும் செயலமர்வு   (06) மட்டக்களப்பு பயனியர் வீதியிலுள்ள கபே சில்லில் நடைபெற்றது.
இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்கு பீட மட்டக்களப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓசோண் படை அழிதல், புவி வெப்பமடைதலால் உயிரினங்கள முகம் கொடுக்கும் சவால்கள் மற்றும் சூழலியல் மாற்றங்கள் பற்றி மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் கே. பிறேமரஞ்சன் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
இதன்போது குளிரூட்டிகள், வாயுச் சீராக்கிகளில் பாவிக்கப்படும் வாயுக்கள் பற்றியும் அவை சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் மேலும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்கு பீட மட்டக்களப்பு மாவட்ட நிலைய இணைத் தலைவர் எம். ரமணசுந்தரம், இணைச் செயலாளர் வி.துசியந்தன் உள்ளிட்ட அங்கத்தினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை கலந்து கொண்டோருக்கு வழங்கி வைத்தனர்.
வளவாளரான அதிபர் கே. பிறேமரஞ்சன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.
இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்கு பீட மட்டக்களப்பு மாவட்ட நிலைய முன்னாள் தலைவர் எஸ். ஜயந்தன் வளவாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் வைத்ததமை குறிப்பிடத்தக்கது.
?.

Related posts