கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல இன்னல்களைச்சந்தித்த இனமாக இருக்கின்றோம் ஆனால் தற்போது யுத்தம் முடிவுற்றாலும் யுத்தகாலத்தில் இருந்த நிலையினை விட யுத்தம் முடிவுற்றபின்னரே கடும் மோசமான இன்னல்களைச்சந்தித்த வண்ணம் இருக்கின்றோம் இதனை அரசிசல் ரீதியாக மாத்திரமல்ல அனைவரும் ஒன்றிணைந்தே சீர்செய்யவேண்டும் என அம்பாரை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் தெரிவித்தார்.
சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினரினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்கலந்து சிறப்பித்தார்
அவர் அங்கு மேலும் பேசுகையில் தமிழ் சமூகத்தின் மத்தியில் இளம் தலைமுறையினரிடம் ஆளுமையான தலைவர்களை உருவாக்கும் நோக்கில் கைலாசப்பிள்ளை ஐயா அவர்களது செயற்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.
இன்று தமிழர்களின் தலைமைத்துவம் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கி ன்றது அதனை உருவாக்கவேண்டுமானால் நினைத்தவுடன் செய்யமுடியாது அதனை இளையோர்களில் இருந்து உருவாக்குவதற்கான அடித்தளத்தினை உருவாக்கும் பொறுப்பு எம்மைப்போன்ற அனைவரிடத்திலும் இருக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த அமைப்பு இவ்வாறான நிகழ்வுகளை நடாத்திவருகின்றன ஆலையடிவேம்புப் பிரதேசமானது தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் அதனைக் கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பு அனைவரிடத்திலும் இருக்கின்றது
கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பல இன்னல்களைச்சந்தித்த இனமாக இருக்கின்றோம் ஆனால் தற்போது யுத்தம் முடிவுற்றாலும் யுத்தகாலத்தில் இருந்த நிலையினை விட யுத்தம் முடிவுற்றபின்னரே கடும் மோசமான இன்னல்களைச்சந்தித்த வண்ணம் இருக்கின்றோம் இதனை அரசிசல் ரீதியாக மாத்திரமல்ல அனைவரும் ஒன்றிணைந்தே சீர்செய்யவேண்டும் அரசியல் ரீதியாக இருக்கலாம் நிர்வாக ரீதியாக இருக்கலாம் எல்லாவற்றிலும் எமது இனத்திற்குப்பாதிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன இதனை சரியான முறையிலே கையாள வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என்றார்