நாட்டில் சிகரெட் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு சிகரெட் உற்பத்தியில் 600 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் சிகரெட் உற்பத்தி 4300 மில்லியனாக காணப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் சிகரெட் உற்பத்தி 3700 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்பிடித்தலை குறைப்பதற்கு கடந்த வருடங்களில் பல்வேறு நடவடிக்கைகயை முன்னெடுத்திருந்தமை இந்த வீழ்ச்சியில் தாக்கம் செலுத்துவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வருடமும் புகையிலை பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.